இறை இரக்கம்

1930ம் ஆண்டிலிருந்து முழு உலககிற்குமான ஒரு விசேட வெளிப்பாடாக போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு இளம் கல்வியறிவு குறைவான அருட்சகோதரியின் (புனித பவுஸ்தீனா) நாள் குறிப்பின் வழியாக பரவத்தொடங்கிய பக்தி முயற்ச்சியாகும். ஆனால் அது ஒரு புதிய செய்தியல்ல. நாம் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட வேண்டும் என்பது பற்றி கத்தோலிக்க திருச்சபை தனது திருநூல் வழியாகவும், பாரம்பரியங்கள் வழியாகவும், தானும் வாழ்ந்து நமக்கும் கற்பித்த இறைவனின் இரக்கத்தன்மையை நினைவூட்டுவதாகும். ஆனால் இறையிரக்க பக்தி திருச்சபையின் செய்தியை வல்லமையுள்ள ஒரு புதிய கண்ணோட்டத்தில் செயல்படுத்த அழைக்கின்றது. அதாவது இறைவனின் அன்பும் இரக்கமும் அளவிடமுடியாதது எனவும், முழு உலகத்துக்குமானது எனவும், விசேடமாக கடின மன பாவிகளாயினும் அவர்களுக்கும் உரியதென ஆழமாகவும் மானசீகமாகவும் உணர்ந்து கொள்ள யாவரையும் அழைக்கின்றது.

இவ் இளம் அருட்சகோதரி தமக்கு இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய இறை இரக்கத்தை கல்வியறிவு குறைவான காரணத்தினால் தனது ஞானமேய்ப்பரான அருட்பணி மைக்கல் சொபோக்கோவின் உதவியுடன் இவ் நாளாந்த வெளிப்பாடுகளையும் உரையாடல்களையும் 600க்கும் அதிகமான பக்கங்களைக் கொண்ட நாட்குறிப்பேட்டின் வழியாக வெளிப்படுத்தினார். இப்பக்தியானது 1938ம் ஆண்டில் புனித பவுஸ்தீனா இறைபதம் அடையும் முன்பே உலகெங்கும் பரவத் தொடங்கியவது.

இறை இரக்கத்தின் வெளிப்பாடு யாதெனில் இறைவன் நம் அனைவரையுமே அன்பு செய்கிறார் அதிலும் நம் பாவங்கள் எவ்வளவு கடினமானதாகினும் "உங்கள் பாவங்கள் கடுஞ்சிவப்பாய் இருக்கின்றன; எனினும் உறைந்த பனிபோல அவை வெண்மையாகும். இரத்த நிறமாய் அவை சிவந்திருக்கின்றன; எனினும் பஞ்சைப்போல் அவை வெண்மையாகும் மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி நடந்தால்; நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள்" (எசா 1:18a) தனது இரக்கம் அதனினும் எவ்வளவு மேலானது என உணர்ந்து அவர் மீது கொள்ளும் நம்பிக்கை மூலம் பெற்றுக்கொண்ட இரக்கத்தை நம் வழியாக அயளவர்களுக்கும் வழிந்தோட செய்வதாகும். ஆண்டவரின் பேரன்புச் செயல்களை எடுத்துரைத்து அவருக்குப் புகழ்சாற்றுவேன்; ஏனெனில், ஆண்டவர் நமக்கு நன்மைகள் செய்துள்ளார்; தம் இரக்கத்தையும் பேரன்பையும் முன்னிட்டு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கு மாபெரும் நன்மை செய்துள்ளார். ஏனெனில், மெய்யாகவே அவர்கள் என் மக்கள், வஞ்சனை செய்யாத பிள்ளைகள்" என்று அவர் கூறியுள்ளார்; மேலும் அவர் அவர்களின் மீட்பர் ஆனார்.. துன்பங்கள் அனைத்திலும் அவர்களின் மீட்பர் ஆனால்; தூதரோ வானதூதரோ அல்ல, அவரே நேரடியாக அவர்களை விடுவித்தார்; தம் அன்பினாலும் இரக்கத்தினாலும் அவர்களை மீட்டார்; பண்டைய நாள்கள் அனைத்திலும் அவர்களைத் தூக்கிச் சுமந்தார். (எசா 63:7-9) இதனால் அனைவரும் அவரது மகிழ்ச்சியில் பங்கேற்பார்கள். எனவே கீழ்வரும் மூன்று பகுதிகளை சுலபமாக மனதில் நிலைநிறுத்தி செயல்படுவோமாக.


1. அவருடைய இரக்கத்திற்காக இறஞ்சுவோமாக.
நம் பாவங்களுக்காக மனம் நொந்து பரிகாரம் செய்து, இறைவன் தன்னுடைய இரக்கத்தை எம்மீதும் அகில உலகின்மீதும் பொழிந்தருள வேண்டுமென்ற செபத்தின் வழியாக தம்மை அணுகுவதை விரும்புகிறார். "ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ளபோதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர்"."(எசா:55:6-7)


2. இரக்கமாயிருப்போமாக:
நாம் அவரது இரக்கத்தைப் பெற்றுக்கொள்வதோடு அதனை அனைவருக்கும் நம்வழியாக பொங்கிப்பாய வேண்டுமென்று இறைவன் விரும்புகின்றார். இறைவன் நம்மை எவ்வாறு மன்னித்து இரக்கம் காட்டினாரோ அவ்வாறே நாமும் நமக்கடுத்தவரை மன்னித்து அன்புகாட்ட வேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்.

நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்;. உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள். (லூக் 6:35 b, 36a)

உங்கள் பகைவரிடமும் அன்பு கூருங்கள்; உங்களைத் துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இப்படிச் செய்வதால் நீங்கள் உங்கள் விண்ணகத் தந்தையின் மக்கள் ஆவீர்கள்(மத் 5:44b, 5a)


ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள். நீங்கள் ஒருவர் மற்றவருக்குச் செலுத்தும் அன்பிலிருந்து நீங்கள் என் சீடர்கள் என்பதை எல்லாரும் அறிந்து கொள்வர்"(யோவா13:34-35)


நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பதுபோல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்புகொண்டிருக்க வேண்டும் என்பதே என் கட்டளை. பேச்சு, நடத்தை, அன்பு, நம்பிக்கை, தூய்மை ஆகியவற்றில் நீ விசுவாசிகளுக்கு முன்மாதிரியாய் விளங்கு. இவ்வாறு செய்தால் நீயும் மீட்படைவாய்; உனக்குச் செவி சாய்ப்போரும் மீட்படைவர். (1திமோ 4: 12 bc. 16 c)


3. இயேசுவை முழுமையாக நம்புதல்:
இறைவன்மீது முழுமையாக நம்பிக்கை வைப்பவர்களுக்குத்தான் தமது அருளிரக்கம் உண்டு என்பதை நாம் அறிந்திருக்க வேண்டுமென்று விரும்புகின்றார். நாம் எவ்வளவுக்கெவ்வளவு இயேசுவின்மீது நம்பிக்கை வைத்திருக்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு இறைவனின் அருளிரக்கத்தைப் பெற்றுக்கொள்வோம்.

என்னிடம் நம்பிக்கை கொள்பவர் என்னிடம் மட்டும் அல்ல, என்னை அனுப்பியவரிடமே நம்பிக்கை கொள்கிறார். என்னைக் காண்பவரும் என்னை அனுப்பியவரையே காண்கிறார் (யோவா 12: 43-44)


என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம். (யோவா 14:23) நான் உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்து கொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள் (யோவா 17:8a)


ஒரு காலத்தில் இருளாய் இருந்த நீங்கள் இப்போது ஆண்டவரோடு இணைந்து ஒளியாய் இருக்கிறீர்கள். ஆகவே ஒளி பெற்ற மக்களாக வாழுங்கள். ஏனெனில், ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது.(எபே.5:8-9)


நாம் இப்போது அறியப்போகும் நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ செய்ய கற்பிக்கவும் அதனை வாழச்செய்யவும் மேலும் தனக்காக வாழாமல் அயலானுக்காகவும், பாவிகளுக்காகவும் வாழும், செபிக்கும் ஒரு பணிதான் என அருட்சகோதரி புனித மரிய பவுஸ்தீனா வழியாக ஆண்டவர் வெளிப்படுத்திய இறை இரக்கத்தின் மறையுண்மை