புனித மரிய பவுஸ்தீனா கோவாலஸ்கா

பரிசுத்த திருச்சபையில் மிகப் பிரபல்யமாக அனைவராலும் அறியப்பட்ட புனிதர்கள் குழுவில் புனித மரிய பவுஸ்தீனா கோவாஸ்கா என்னும் இறை இரக்க திருத்தூதரும் ஒருவர். இறைவன் மீது முழுமையாக நம்பிக்கை வைத்து செபிப்பதோடு, அதே நம்பிக்கை அடிப்டையில் அயலாரோடு இரக்கமாக செயல்பட்டு வாழும் கிறிஸ்தவ மாதிரியான கிறிஸ்துவின் உயர்வான செய்தியாகிய இறைவனின் இரக்கத்தைப் பரப்புவதற்கு தெரிந்தெடுக்கப்பட்ட புனிதர் இவரே,

புனித மரிய பவுஸ்தீனா கோவாலஸ்கா, போலந்து நாட்டின் லோட்டஸ் நகரத்தின் கொகோவிக் கிராமத்தில் பத்துப் பிள்ளைகளைக் கொண்ட ஏழ்மையான வேளான் குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக 1905ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ந் திகதி பிறந்தார். டூவின்ஸ் வோர்கி பங்குத் தேவாலயத்தில் ஹெலேனா என்னும் பெயரோடு திருமுழுக்குப் பெற்றார். சிறு பராயத்திலிருந்தே விருப்போடு செபிப்பதிலும், கீழ்படிவோடு உழைப்பதிலும், ஏழைகள்மீது கருணை காட்டும் பண்போடும் விளங்கினார். ஏழாவது வயது முதலே இறை நம்பிக்கையில் உணர்ச்சி வசப்பட்டவராகத் வளர்ந்தார். தனது ஒன்பதாவது வயதில் முதல் தேவநற்கருணையைப் பெற்ற போது தான் ஒரு இறை விருந்தாளி என்னும் உணர்ச்சி பூர்வமாக தனது உள்மனதில் ஆழ்ந்த இறை உறவோடு வாழ்ந்தாள். இதே வேளை தனது பெற்றோரிடம் இறை ஊழியத்திற்கு போகவேண்டும் என விருப்போடு கேட்டபோது அவர்களால் மறுக்கப்பட்டார். 13வது வயதிலிருந்து பாடசாலைக்குப் போவதிலும், 16வது வயதில் குடும்ப ஏழ்மை காரனமாக தனது இறைபணி ஆடைகளுக்கு தேவையான செலவுக்காகவும் குடும்பத்தின் செலவு தேவைகளுக்காகவும் அலெக்சண்டிராவ் நகரத்தில் வீட்டுப் பணிபெண்னாக வேலை பார்த்தார்.

ஆண்டவரின் பாடுகளை காட்சியில் கண்டுதோடு அழைப்புப் பெற்று பல மடங்களில் முயற்சி செய்தும் கைகூடாமல் இறுதியில் 1925ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 1ம்நாள் தேவதாயின் இரக்க கன்னியர்மடத்தில் தனது இருபதாவது வயதில் பவுஸ்தீனா என்னும் பெயரோடு இணைந்து கொண்டார். சபையின் பல இடங்களிலும் பணியாற்றிய இவர் வில்னியஸ் தேவதாயின் இரக்க கன்னியர்மடத்தில் கரக்கவ் என்னும் நகரத்தில் வீட்டுப்பணிகளாகிய சமையல், தோட்டவேலை, கதவடி எடுகூலி ஆகிய பணிகளில் விருப்போடு பங்கெடுத்து பதின்மூன்று ஆண்டுகள் இறைபணியாளர்களின் வாழ்க்கைச் சட்டங்களின்படி நேர்மையாக பொறுப்போடு, பணியாற்றினார். அதேவேளை உள்ளார்ந்தமாக தன்னைப் புதிப்பதிலும், சாந்தமாகவும், இயற்கையான தன்மையோடும், நிறை கனிவோடும், பிறரைப் பற்றி ஆராயாமலும், வாழ்ந்த இவர், அவ்வாழ்வு அற்பமானதாகவும், சலிப்புள்ளதாகவும், துயரார்ந்ததாகவும் வெளிப்படையானதக இருந்தாலும் உள்ளார்ந்தமாக இறைவனோடு அசாதரணமாக இணைந்திருப்பதை மறைத்து வாழ்ந்தார். இறை இரக்கத்தின் மறை பொருளை அறியத் தொடங்கிய காலமுதல் அதை விரிவுபடுத்துவதற்கு உதவியாக அதைத் தியானிப்பதிலும், பிறருக்கு அன்பு காட்டுவதிலும், இவர் சிறுகுழந்தையைப் போலாகினார்.

பரிசுத்த திருச்சபைக்கு விசுவாமுள்ள ஒரு சிறந்த மகளாக வாழ்ந்த புனித மரிய பவுஸ்தீனா கோவாலஸ்கா அதை இயேசுக் கிறிஸ்துவின் மறை உடலாகவும் தனது சொந்தத் தாயாகவும் கருதி, அதனோடு இணைந்து இழந்துபோன ஆன்மாக்களை மீட்டெடுக்கும் இறைஇரக்கப் பணியை ஆர்வத்தோடு ஈடுபட்டார். ஆண்டவர் இயேசு கேட்டுக் கொண்டதன்படி கிறிஸ்துவின் இழந்துபோன ஆன்மாக்களை மீட்டெடுக்கும் இறை இரக்கப் பணிக்காக தன்னுடைய சொந்த வாழ்வையே உயிர்பலியாக ஒப்புக்கொடுத்தார். தன் ஆன்மீக வாழ்வில் இவர் தேவநற்கருணையை முழுதாக அன்பு செய்வதிலும் இரக்கதாயின் பக்தியை ஆழமாக பின் பற்றுவதிலும் வேறு பட்டவராக இருந்தார்.

கன்னியர் மடத்தில் இவர் வாழ்ந்த போது, இறை கொடைகளாகிய வெளிப்பாடுகள், காட்சிகள், ஆண்டவரின் பாடுகளில் பங்கேற்ப்பு, இரு இடங்களில் தோன்றுதல், மானிட உள்ளாளத்தை அறிதல். இறைவாக்கு வரம், மறைவான திருமண இணைப்பைப் பற்றிய அறிவு, போன்ற அரிய கொடைகள் நிறைந்தவராக காலங்கழித்தார். ஆனாலும் இறைவனோடும், மரியன்னை, வானதூதர், புனிதர்கள், வேதனையுறும் ஆன்மாக்களைக் காணுதல் போன்ற உறவு தான் உலகில் முழுமையான தெய்வீகத்தன்மையானது என வாழ்ந்தார். அதையே தனது குறிப்பேட்டில் எழுதும்போது: அருட்கொடைகளோ, வெளிப்பாடுகளோ, பேரானந்தமோ, ஒருபோதும் ஆன்மாவை நிறைவு செய்யாது. மாறாக இறைவனோடு சற்று நெருக்கமாகும் ஆன்மாவே நிறைவு பெறும். இக்கொடைகள் எல்லாம் ஆன்மாவிற்கு வெறும் அலங்காரங்களே. இவை தேர்தெடுக்கப்பட்ட சாரங்களையோ, நிறைவையோ தருவதில்லை. மாறாக, எனது துய்மையும், நிறைவும் இறை திருவுளம் என் சித்தத்துடன் நெருக்கமாக இருப்பதிலேயே அமைகின்றது. (கையேடு: 1107)

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புனித மரிய பவுஸ்தீனா கோவால்காவை தனது முக்கியமான உயரிய செய்தியை உலகிற்கு எடுத்துச் சொல்ல இரக்கத்தின் திருத்தூதராகவும். செயலாளராகவும் தேர்ந்தெடுத்து அவளிடம் கூறும்போது: "பழைய உடன்படிக்கையின் காலத்தில் நான் இறைவக்கினர் வழியாக இடிமுழக்கம், திடீர் மின்னல்கள் ஆகிய கொடூர பயமுறுத்தல்கள் மூலம் செய்திகளை அனுப்பினேன். ஆனால் இன்று உன்னை எனது முழு உலகத்துக்குமான இரக்கத்தின் வெளிப்பாட்டோடு அனுப்புகிறேன். ஏனெனில் வேதனையுறும் மனுக்குலத்தை தண்டியாமல் அதனை இரக்கமிக்க எனது இதயத்துள் அமிழ்த்தி குணப்படுத்துவதே எனது விருப்பமாகும்". (கையேடு: 1588)

சயரோகத்தின் கணக்கிட முடியாத வேதனைகளை தன்னுள் தாங்கிக்கொண்ட புனித பவுஸ்தீனா அதனை பாவிகளின் மீட்புக்காக ஒப்புக் கொடுத்தார். மறைவான இறை உறவுக்கும், ஆன்மீக முதிற்சிக்கும் கீர்த்தி பெற்றவராக இவர் 1938ம் வருடம் ஒக்டோபர் மாதம் 05ந் திகதி தனது 33வது வயதில் இறை அமைதியில் உறங்கினார்.

உள்ளார்ந்த மறைவாழ்வை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தனது தூய வாழ்வு முறையால் இறை இரக்க வாழ்வு முறையை கத்தோலிக்க சமயமரபு மூலமாக பரவச்செய்த பெருமையோடு இறைவனோடு இணைந்த இவர் பெற்ற அருள்களினால் 1965-67 ஆண்டுகளில் முக்திபேறு பெற்ற வாழ்வுப் பிரகடணத்திற்கு நடபடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை றோமை நகரத்தில் சமர்ப்பித்து முன்னெடுக்கப்பட்டு 1992 டிசம்பர் வரை தொடர்ந்தது. அதன்வழியாக 1993 எப்ரல் 18ம் நாள் திருத்தந்தை 2ம் யோண்போலினால் திருப்பீடத்தின் மகிமை நிலைக்கு உயர்த்தப் பட்டார். அவரது திருவுடல் இப்பொழுது கரக்கவ் உள்ள இறைஇரக்க தேவாலயத்தினுள் அமைதியில் உறங்குகிறது

"God has spoken to us through the spiritual wealth of Blessed Sister Faustina Kowalska. She left to the world the great message of Divine Mercy and an incentive to complete self-surrender to the Creator. God endowed her with a singular grace that enabled her to experience His mercy through mystical encounter and by a special gift of contemplative prayer.

அத்தோடு 2000ம் ஆண்டு எப்ரல் மாதம் 30ந் திகதி திருத்தந்தை 2ம் யோண்போலினால் புனிதையாகப் பிரகடணப் படுத்தப் பட்டார்