இறை இரக்கத்தின் மலர்(செப)மாலை
1933ம் ஆண்டு இயேசு கிறிஸ்து ஆண்டவர் பற்றிய அதிர்ச்சி மிக்க காட்சியின் வேளையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பற்றி விபரிக்கையில் புனித பவுஸ்தீனா:
"மிகப் பெரிய ஒளியின் மத்தியில் தந்தையாகிய கடவுளையும் கண்டேன். இந்த ஒளிக்கும் மண்ணுலகுக்கும் இடையில் இயேசு சிலுவையிலே அறையப் பட்டிருப்பதையும், அறையப்பட்டிருந்த நமதாண்டவரின் காயங்களினூடாக தந்தையாம் இறைவன் மண்ணுலகின்மேல் கண்கொண்டு பார்ப்பதையும் கண்டு இயேசுவின்மீது கொண்டுள்ள அன்பின் காரணத்தினால் தான் இறைவன் மண்ணுலகை ஆசீர்வதிக்கின்றார் என புரிந்துகொண்டேன்."
மேலும் 1935ம் ஆண்டு புரட்டாதி மாதம் இன்னுமொரு இயேசு கிறிஸ்து ஆண்டவர் பற்றிய காட்சியை எழுதும்போது:
"மண்ணுலகை அழிப்பதற்காக இறைவனின் கடுங்கோபத்தை நிறைவேற்ற வந்து கொண்டிருந்த வானதூதரை கண்டேன். அப்போது மனதிற்குள் கூறக்கேட்ட வார்த்தைகள் வழியாக உலகத்திற்காக ஊக்கமாக வேண்டிக் கொள்ளத் தொடங்கினேன். அவ்வாறு நான் செபிக்கும்போது, வானதூதர் நீதித்தண்டனையை நிறைவேற்ற முடியாதவராகி செயலிலந்ததைக் கண்டேன்.
அடுத்த நாள் அருட் சகோதரி புனித பவுஸ்தீனா செபிக்க சென்ற வேளையில் காட்சியில் ஆண்டவர் தோன்றி
"நீ எனது செயலாளராகவும், இரக்கத்தின் தூதுவராகவும், அயலாருக்கு இரக்கமுள்ளவளாக இருப்பதெப்படி என்பதற்கு மாதிரியாகவும், இறைவனுடைய இரக்கத்தை திரும்பவும் உலகம் முழுவதற்கும் உணரச்செய்யும் கருவியாகவும் வரவேண்டுமென நான் கேட்கிறேன்"

என்றும் தனது இரக்கத்தை வாழ்வதற்கு உரிய விசேட வழிகளையும் அருட் சகோதரி பவுஸ்தீனாவுக்கு இயேசு வெளிப்படுத்னார். அவை அவரது மரணத்தின் நேரமான மாலை 3 மணிக்கு சொல்லப்பட வேண்டிய நவநாள் செபங்கள், இறை இரக்க மலர்(செப)மாலை ஆகிய இரண்டில் இந்த இறை இரக்க செபமாலை ஒன்றாகும்.

இறை இரக்க மலர்(செப)மாலையை தியானிப்பது எப்படி?

சாதாரண ஐம்பத்து மூன்றுமணி மலர்(செப)மாலையை பாவித்து இவ்இறை இரக்க மலர்(செப)மாலையை சொல்லலாம்.


ஆரம்பச் செபமாக
தூய சிலுவை அடையாளத்தினாலே எங்கள் சத்துருக்களிடமிருந்து எங்களை இரட்சித்தருளும். எங்கள் சர்வேசுரா, பிதா, சுதன் பரிசுத்த ஆவியின் பெயராலே. – ஆமென்
தொடக்க செபமாக
இயேசுவே, நீர் உயிர் விட்டீர். ஆனால் உயிரின் ஊற்று ஆன்மாக்ககாக உம்மிடமிருந்தே பொங்கி வழிந்து, அகில உலகிற்குமான இரக்க சமுத்திரம் திறக்கப்பட்டது. ஓ வாழ்வின் சுணையே ஆழங்காணா இறை இரக்கமே! எங்களுக்காக உம்மை வெறுமையாக்கி, முழு உலகையும் ஆட்கொள்வீராக. (கையேடு 1319)
தொடர்ந்து
இயேசுவின் இதயத்திலிருந்து எங்களுக்காக இரக்கத்தின் ஊற்றாக பொங்கிவழிந்த இரத்தமே, தண்ணீரே! நான் உம்மீது நம்பிக்கை வைக்கிறேன். (மூன்று தடவை சொல்லவும்) (கையேடு 187)
திவ்ய நற்கருணை ஆராதனை : (தேவாலயத்திலிருந்தால் மாத்திரம் சொல்லவும்)
நித்திய ஸ்துதிக்குரிய பரிசுத்த பரம திவ்ய நற்கருணைக்கு, சதா காலமும், ஆராதனையும் ஸ்துதியும் தோஸ்திரமும் நமஸ்காரமும் உண்டாகக்கடவது. (மூன்று தடவை சொல்லவும்)
கிறிஸ்து கற்பித்த செபம் :
பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,
உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக.
உம்முடைய இராட்ச்சியம் வருக.
உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல,
பூலோகத்திலும் செய்யப்படுவதாக.
எங்கள் அனுதின உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.
எங்களுக்குத் தீமை செய்தவர்களை நாங்கள் பொறுப்பதுபோல,
எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.
எங்களைச் சோதனையில் விழவிடாதேயும்.
தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும். - ஆமென்.
மங்கள வார்த்தை செபம் :
அருள் நிறைந்த மரியே வாழ்க! கர்த்தர் உம்முடனே.
பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே.
உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே .
அர்ச்சிஸ்ட மரியாயே, சர்வேசுரனுடைய மாதாவே
பாவிகளாயிருக்கிற எங்களுக்காக இப்பொழுதும் எப்பொழுதும்,
எங்கள் மரண நேரத்திலும் வேண்டிக்கொள்ளும். - ஆமென்.
விசுவாச அறிக்கை : (மலர்(செப)மாலை சிலுவையில்)
பரலோகத்தையும் பூலோகத்தையும் படைத்த,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனை விசுவசிக்கிறேன்.
அவருடைய ஏக சுதனாகிய நம்முடைய நாதர் இயேசு கிறிஸ்துவையும் விசுவசிக்கிறேன்.
இவர் பரிசுத்த ஆவியினால் கர்ப்பமாய் உற்பவித்து கன்னிமரியா இடமிருந்து பிறந்தார்.
போஞ்சுபிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு,
சிலுவையில் அறையுண்டு,
மரித்து அடக்கம் செய்யப்பட்டார்.
பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் மரித்தோரிடமிருந்து உயிர்த்தெழுந்தார்.
பரலோகத்திற்கு எழுந்தருளி,
எல்லாம் வல்ல பிதாவாகிய சர்வேசுரனுடைய வலது பக்கம் வீற்றிருக்கிறார்.
அவ்விடத்திலிருந்து சீவியரையும் மரித்தவரையும் நடுத்தீர்க்க வருவார்.
பரிசுத்த ஆவியை விசுவசிக்கிறேன்.
பரிசுத்த கத்தோலிக்க திருச்சபையை விசுவசிக்கிறேன்.
புனிதர்களுடைய சமூதீதப் பிரயோசனத்தை விசுவசிக்கிறேன்.
பாவப்பொறுத்தலை விசுவசிக்கிறேன்.
சரீர உத்தானத்தை விசுவசிக்கிறேன்.
நித்திய சீவியத்தை விசுவசிக்கிறேன். - ஆமென்.
Redஒவ்வொரு பெரிய மணிகளிலும் சொல்லுக:
(இயேசு கேட்டுக்கொண்டபடி)
(கிறிஸ்து கற்பித்த செபம் சொல்லும் மணிகளில்)
நித்திய பிதாவே!
எமது பாவங்களுக்காகவும்,உலகின் பாவங்களுக்காகவும்
பரிகாரம் செய்யும்படியாக.......
உமது நேச குமாரனாகிய எமதாண்டவர்
இயேசுக் கிறிஸ்துவின் உடலையும், இரத்தத்தையும்,
ஆன்மாவையும், தெய்வீகத்தையும்
உமக்கு ஒப்புக் கொடுக்கிறோம்.
Blueஒவ்வொரு சிறிய 10 மணிகளிலும் சொல்லுக:
(இயேசு கேட்டுக்கொண்டபடி)
(அருள்நிறைந்த மரியே சொல்லும் மணிகளில்)
இயேசுவின் துன்பகரமான பாடுகளைப் பார்த்து.....
எங்கள்மீதும், முழுஉலகின்மீதும் இரக்கமாயிரும்.
இறுதியில்: (53 மணி முடிவில் சொல்லவும்)
தூய இறைவா, வல்ல தூயவரே, என்றும் வாழும் தூயவரே
முழு உலகின்மீதும், எங்கள்மீதும் இரக்கமாயிரும்.
(மூன்று தடவை சொல்லவும்)
தேர்வுக்குரிய முடிபுச் செபம்:
இயேசுவே!
நீர் தாமே எம்மீது கொண்ட அன்பினால் கொடூர பாடுகளை அனுபவித்தீரே.
உமது பெருமூச்சொன்றே உமது தந்தையின் நீதியைச் சாந்தப்படுத்தியிருக்கும்.
ஆனாலும் எமக்கு நிலைவாழ்வை பெற்றுத் தருவதற்காக சிலுவைமரணத்தை
ஏற்க உம்மைத் தூண்டியது எண்ணிலடங்கா உமது அன்பும் இரக்கமுமே...
உமது தூய விலாவைத் திறப்பதற்கு அனுமதித்து
உமது இதயத்தில் இருந்து வற்றாத இரக்கத்தின் ஊற்றைத் திறந்து,
இரத்தத்தையும் நீரையும் அன்பின் பரிசாக எமக்கு அளித்தீரே,
உமது சர்வவல்லமை உள்ள இரக்கம் இதல்லவோ.
இதன் வழியாகத் தானே சகல அருளும் எம்மீது என்றும் பொழியப்படுகின்றது. - ஆமென். (கையேடு 1747)


இறை இரக்கத்தின் புகழ்மாலையை சொல்லவும்.