இறை இரக்கத்தின் பெருவிழா

இறை இரக்க வெளிப்பாடு வேளையில் இயேசு ஆண்டவர் அருட் சகோதரி பவுஸ்தீனாவை இறை இரக்கத்தின் விழாவை உணர்வு பூர்வமாக அர்ப்பணிக்கப்பட வேண்டும் எனவும், அவ்விழா ஒவ்வொரு பாஸ்கா ஞயிறுக்குப் பின் வரும் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்பட வேண்டும் என அனேக சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார்.

அந்நாளில் திருப்பலியில் வாசிக்கப்படும் திருவழிபாட்டு வாசகங்களில் கருப்பொருளாக அமையப்பெற்ற ஒப்புரவு அருட்சாதன நிறைவேற்றம் பற்றியும், செயல் வடிவமான கிறிஸ்தவ வாழ்வு முறையும் இறைவனின் இரக்கத்தின் வெளிப்படுத்துதலும் ஆனதாக ஆண்டவரின் விருபத்தின்படி அமைந்திருப்பதும் ஒரு விசேடமாகும்.

இப்பெருவிழா சில காலமாக போலந்து நாட்டிலும், வத்திக்கானிலும் பல இடங்களில் தனிப்பட்ட வழிபாடாகவும் அனுசரிக்கப்பட்டும் வந்திருந்தது. ஆயினும் அருட் சகோதரி பவுஸ்தீனாவை புனிதையாக பிரகடனப்படுத்தும் நிகழ்ச்சியில், 2000ம் ஆண்டு சித்திரை மாதம் 30ம் நாள் திருத்தந்தை 2ம் யோண்போல் அகில உலக திருச்சபைகளுக்கும் இந்நாள் அதாவது பாஸ்கா விழாவுக்கு அடுத்த ஞாயிறு, இறை இரக்கப் பெருவிழா நாளாக அங்கிகரிக்கப்பட்டது என அறிவித்தார்.. பாப்பரசரின் இவ்வங்கிகரிப்பானது, இவ்விழாவை பரிசுத்த திருச்சபையானது உயர்தரத்தோடு ஏற்று, அங்கிகரித்து, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினால் அருட் சகோதரி பவுஸ்தீனாவிடம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு தனிப்பட்ட வெளிப்பாடாக பிரகடணப்படுத்தி, இப்பெருவிழா குறையேதுமில்லாத, ஆன்ம பலத்தோடு, அருளுடமை கொண்டதானது என உறுதிபடுத்தி, உலகெங்கும் பொதுப் பெருவிழாவாக கொண்டாட அழைப்பு விடுத்திருக்கிறது.

இந்நாளை அருட்சாதன ஒழுங்குகளுக்கும், இறை இரக்க வழிபாட்டுக்குமான குழுமத்தினால் எதிர்வரும் ஆண்டுகளில் உலகுகெங்குமுள்ள கத்தோலிக்க குடும்பங்களும், முழுமனுக்குலமும் முகங்கொடுக்கப் போகும் சோதனைகளிலிருந்தும், சங்கடங்கலிருந்தும் விடுவித்து பாதுகாக்கப்பட இறை தயையை இறஞ்சுவதற்கு இறை இரக்க ஞாயிறு பொருத்தமானது என 2000ம் வருடம் ஒருமனப்பட்ட அனைவருக்கும் என நிலையான அழைப்புவிடுத்தது.

அருட்சகோதரி புனித பவுஸ்தீனாவின் நாள்குறிப்பேடு வழியாக இயேசு

1. "எவராவது இறை இரக்க பெருவிழா நாளில் வாழ்வின் இவ்வூற்றை அண்டி நெருங்கி வந்தால் அவருக்கு தண்டனை தீர்ப்பிலிருந்தும், கடினபாவத்திலிருந்தும் முழுமையான மன்னிப்பு அருளப்படுவார்." (கையேடு 300)
2. "பாஸ்காவுக்கு அடுத்த முதல் ஞாயிறு (இறை இரக்க ஞாயிறு) இறை இரக்க உருவப்படத்தை அதிகார பூர்வமாக ஆசீர்வதித்து வெளிப்பப்படுத்தபடுவதோடு, ஒவ்வொரு ஆன்மாவும் இதைப் பற்றி தெளிவாக அறிந்து கொள்ள கூடியதாக விளக்கம் கொடுத்து பகிரங்கமாக பெருமதிப்புக் கொடுக்க வேண்டும்." (கையேடு 341)
3. "இறை இரக்க பெருவிழா எனது இரக்கத்தின் உள்ளாளத்திலிருந்து வெளிப்படும் அளவற்ற உணர்வு பூர்வமாண இரக்கத்தை உறுதிப்படுத்துகின்றது." (கையேடு 420)

புனித பவுஸ்தீனா இப்படத்தின் விபரங்களை குறிப்பிடும் போது ஒரு சந்தர்ப்பத்தில் நான் இந்தவசனங்களை கேட்டேன்:

4."மகளே, எனது ஆழங் காண முடியாத இரக்கத்தைப் பற்றி முழு உலகத்திற்கும் எடுத்துக் கூறுவாயாக. இறைஇரக்கப் பெருவிழா சகல ஆன்மாக்களுக்கும், விசேடமாக கடின மன பாவிகளுக்கும் அடைக்கலமும் பாதுகாவலும் ஆகும். அந் நாளில் எனது உள்ளாழத்திலிருந்து கனிவு உள்ள இரக்க பெரு வெள்ள மடை திறக்கப்படுகின்றது. எனது இரக்கத்தின் ஊற்றை நெருங்கி வரும் ஆன்மாக்களுக்கு நிறைவான அருட்கடலை பொழிந்திடுவேன். இந்நாளில் உண்மையான மனமாற்றத்தோடு ஒப்புரவு அருட்சாதனத்தை பெற்றுக் கொண்டு திருப்பலியில் பங்கு பற்றி திவ்விய நற்கருணையைப் பெற்றுக்கொள்ளும் எந்தவொரு ஆன்மாவுக்கு கடினமான பாவத்திலிருந்தும், தண்டனை தீர்ப்பிலிருந்தும் முழுமையான மன்னிப்பு அருளப்படும். அந்நாளில் எனது தெய்வீக அருள்மடை வழியாக இறையருளருவி திறக்கப்படும். எந்தவொரு ஆன்மாவும், ஏன் கருஞ்செந்தூரம் போன்ற பாவம் செய்த ஆன்மாவானாலும் என்னை அண்டிவர அஞ்சத் தேவையில்லை. வானதூதர்களாலேயோ, மனுக்குலத்தவராலோ எங்கும் எக்காலத்திலும் எவ்வகையிலும் புரிந்து கொள்ள முடியாத அளப்பரியது இவ்விரக்கம். உயிர்வாழும் அனைத்தும் எனது உணர்வு பூர்வமான இரக்கத்தின் உள்ளாழத்திலேயே நிறைவடைகின்றது. என்னோடு நெருங்கி உறவாடும் எந்த ஆன்மாவும் முடிவில்லாக் காலத்திற்கும் எனது அன்பிலும் இரக்கத்திலும் நிலைத்திருக்கும். இவ்வதியுயர் பண்பிலேயே இப்பெருவிழா வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இவ்விழா ஒவ்வொரு பாஸ்கா ஞயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறு அன்று கொண்டாடப்படவேண்டும் என்பதே என் விருப்பம். மனுக்குலம்; எனது இரக்க ஊற்றண்டை நெருங்காவிட்டால் அமைதியை அடையவே முடியா"
5. "ஆம் ஒவ்வொரு பாஸ்கா ஞயிறுக்குப்பின் வரும் முதல் ஞாயிறும் இறை இரக்க பெருவிழா ஆயினும், உனது இரக்கச் செயல்களே என்னை அன்பு செய்வதை உண்மையாக வெளிப்படுத்தும். அவற்றையே நீ கட்டாயமாக செயல் படுத்த வேண்டும் என ஆணை இடுகிறேன். நீ எப்போதும் எச்சந்தர்பங்களிலும், எந்நிலையிலும் உன் அயலவருக்கு இரக்கம் காட்ட வேண்டும். நீ அதிலிருந்து பின்வாங்கிக் கொள்ளவோ, அல்லது உனது இயலாமை என தவிர்த்துக் கொள்ளவோ கூடாது என உரிமையுடன் கேட்கின்றேன்." (கையேடு 742)
6. " இறை இரக்க பெருவிழா நாளில் உண்மையான மனமாற்றத்தோடு ஒப்புரவு அருட் சாதனத்தை பெற்றுக்கொண்;டு திருப்பலியில் பங்கு பற்றி திவ்விய நற்கருணையைப் பெற்றுக் கொள்ளும் ஆன்மாவுக்கு கடினபாவத்திலிருந்தும் தண்டனை தீர்ப்பிலிருந்தும்; முழுமையான மன்னிப்பு அளிப்பேன். (கையேடு 1109)

ஆண்டவர் ஏறக்குறைய 14 தடவைகளுக்குமேல் இவ்விழாவின் வெளிப்பாடு பற்றி அருட் சகோதரியைக் கேட்டுக் கொண்டுள்ளார். (கையேடு பகுதிகள் 49, 88 89 280 299 341 420 570 699 742 1109) மேலும் ஒரு சந்தர்ப்பத்தில்: இந்த பணிக்காக உன்னால் முடிந்தளவு முயற்ச்சி செய். இவ்விழாவில் தான் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். (கையேடு 1109) புனித பவுஸ்தீனா இப்பகுதியை முடிக்கும்போது ஆண்டவரின் இக்கேள்வியை தடுக்க யாராலும் முடியாதென நான் அப்பொழுதே புரிந்து கொண்டேன் என எழுதுகிறார்.