புனித கன்னிமரியா இரக்கத்தின் இராக்கினி

இரக்கத்தின் இராக்கினி என அடிக்கடி தேவ தாயாராகிய புனித கன்னிமரியாவை அழைக்கின்றோம். எனெனில் இவ்வாறு அவர் அழைக்கப்படுவதற்கு அவர் காட்டிய கருணை, பிறர்சினேகம், பெருந்தன்மை, பரிந்துரைத்து வேண்டுதல் என்பனவாகும்.

பழைய உடன்படிக்கையின் எஸ்தர் அரசியின் பரிந்து மன்றாடும் இடத்தை (எஸ்தர் 4:17) புதிய உடன்படிக்கையின் கிறிஸ்துவின் தாயான அவர் வாழும்போது, கானாவூரில் திருமணவேளையில் பரிந்து வேண்டுவதையும். (யோவா 2: 3-5) "திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது" என்றார். இயேசு அவரிடம், "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்யமுடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே" என்றார். இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். மேலும் திருத்தூதரோடு இணைந்து தூய ஆவியின் வருகைக்காக பரிந்து செபிப்பதையும் (தி.தூ 1:14) "அவர்கள் அனைவரும் சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும் அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக் கொணடிருந்தார்கள்" காண்கின்றோம். இன்று தம் மகனாகிய இரக்கத்தின் அரசராகிய இயேசுவிடம் இடையறாது பாவிகளின் மீட்புக்காகவும், உலக மாந்தர்களாகிய நாம் உறுதியான நம்பிக்கையோடு தங்கள் வேதனைகளிலும், இடர்களிலும் வேண்டும்போதும் அவர் பரிந்து பேசுவதாலும் நிறைவு செய்கின்றார்.

இரக்கத்தின் தாயார் என வனவாசியான குழுனி நகரத்தைச் சேர்ந்த புனித ஓடோ வினால் முதன்முதல் அழைக்கப் பெற்றார்.(see Vila Odonis 1:9 pl 133:47) இப் பகுதியை சிலுவையில் தன் அன்புச் சீடருக்கு கண்ணால் காண முடியாத இறைவனின் இரக்கத்தை வெளிப்படுத்தும் விதத்தில் நிறை அருளும் இரக்கமும் நிறைந்த கன்னி மரியாவை தாயாகக் காட்டும் போது, இயேசுவே "இதோ உன் தாய்" என்று அறிமுகப்படுத்துகிறார். (யோவா 19: 26-27a) " இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார்.பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். இதனால் இயேசுவை நம்பி அவரை அன்பு செய்யும் அனைவருக்கும் அவர் ஆன்மீக தாயாக விசுவாசிகளுக்கு அருளப்பட்டார். மரியாவை மிகுந்த இரக்கமுள்ளவர், பரிவன்புமிக்க தாய், கனிவுமிகுந்த தாய், நிறையன்புள்ள தாய் என கூறும் புனித பிரிந்துசீ லோறன்ஸ் புனித கன்னி மரியா இரக்கத்தின் தாய் என அழைக்கின்றார்.

இறைவனின் இரக்கத்தின் தாயும் அரசியும் என 2 பகுதிகளினால் வெளிப்படுத்தப்படுகிறது.
1. இறைவனின் இரக்கத்தை மிக விந்தையாக மறைவாக தனிப்பட்ட முறையில் அடைந்த ஒரு கன்னிபெண் (லூக் 1:28) வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார் (லூக் 1:30) வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர்
வேறு ஒரு மானிடருக்கும் கிடைக்காத தனிப்பட்ட விதிவிலக்கான வகையில் இறை இரக்கத்தைப் பெறறுக் கொணடவர் தான் கன்னி மரியா என 2ம் யோண்போல் தனது வரை மடலின் முன்னுரையில் எதிரொலிக்கிறார் (Encyclical letter Eives in aisei corelia No.9:445 72ok 1980)
நற்செய்தியாளர் மரியா தனது இறைபுகழ் பாடலில் (லூக் 1:50) அவருக்கு அஞ்சி நடப்போருக்குத் தலைமுறை தலைமுறையாய் அவர் இரக்கம் காட்டி வருகிறார். (லூக் 1:54) மூதாதையருக்கு உரைத்தபடியே அவர் ஆபிரகாமையும் அவர்தம் வழி மரபினரையும் என்றென்றும் இரக்கத்தோடு நினைவில் கொண்டுள்ளார் என இறைவனின் இரக்கம் மரியாமீது பொழியப்பட்டிருப்பதாகக் கூறி மரியாவை மேன்மைப்படுத்துகிறார்.

அதோவேளை இறைவனின் விருப்பப்படியே நாம் செயலாற்ற வேண்டும் எனவும் தாயன்புடன் எமக்கு கற்பிக்கின்றார்.(யோவா 2: 3-5) இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்" என்றார். எனவே விசுவாசிகளாகிய நாமும் இறை இரக்கத்தின் தாயாகிய மரியாவின் துணையோடு எப்பொழுதும் இறை புகழ்களோடு அவர் மகிமைக்காக பணியாற்றுவோமாக.