"ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்,
ஏனெனில் அவர் நல்லவர்; என்றென்றும் உள்ளது அவரது
பேரன்பு." (திபா:118:1)
மலர் போன்றது இறையன்பு கனி போன்றது இறை இரக்கம
தந்தையின் உள்ள ஆழத்திலிருந்து பொங்கிப் பாய்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இறைவனின் அதியுயர் பண்பாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்புரிந்து கொள்ள முடியாத மறை பொருளாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்அதிதூய மூவொரு இறைவனின் மறைபொருளிலிருந்து பொங்கும் சுனையாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்மனிதராலோ இறைதூதராலோ அறிவால் ஆழங்காண முடியாத இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்நிறை வாழ்வும் மகிழ்வும் ஊற்றெடுக்கும் இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்விண்ணகத்திலும் மேன்மையான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்அற்புதங்களுக்கும் அருஞ்செயல்களுக்கும் மூலகாரணமான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்படைப்பனைத்தையும் சூழ்ந்துள்ள இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இறைவார்த்தை மனுவுருவாகி மண்ணில் இறங்கிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இயேசுவின் திரு இதயத்தின் திறந்த காயத்திலிருந்து பொங்கிப் பாய்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்எமக்காகவும் சிறப்பாக பாவிகளுக்காகவும் இயேசுவின் திரு இதயத்துள் நிறைந்துள்ள இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்ஆழங்காண முடியாத திருவிருந்தை உருவாக்கிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்பரிசுத்த திருச்சபையை கட்டிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்திருமுழுக்கு அருட் சாதனத்தில் இருக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இயேசு கிறிஸ்து வழியாக எம்மை நியாயப்படுத்தும் இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்எமது வாழ்வு முழுவதும் எம்மோடு இருக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்சிறப்பாக மரண வேளையில் எம்மை அரவணைக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்நிலை வாழ்வை எமக்கு அளிக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் எம்மோடு இணைந்திருக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்நரக நெருப்பிலிருந்து எம்மைக் காப்பாற்றுகின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்கடினமன பாவிகளின் மனமாற்றத்தில் இருக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்வானதூதரின் வியப்பிற்கும் புனிதர்களால் புரிந்துணர முடியாததுமான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இறைவனின் அனைத்து மறை உண்மைகளிலும் ஆழங்காண முடியாத இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்சகல துன்பங்களிலிருந்தும் எம்மை விடுவிக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்எமது மகிழ்வுக்கும் இன்பத்துக்கும் காரணமான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்வெறுமையில் இருந்து எம்மை வாழ்வுக்குள் அழைத்த இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இறைவனின் படைப்பனைத்தையும் அரவணைக்கின்ற இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இறை செயல்களின் சிகரமாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்நாம் அனைவரும் மூழ்கியிருக்கும் இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்துயர்மிகு இதயங்களுக்கு இனிமைமிகு ஆறுதலான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்மனத்திடமற்ற ஆன்மாக்களுக்கு ஒரே நம்பிக்கையாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்இதயங்களுக்குத் திடமும் அச்சத்தில் அமைதியுமான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்தூய ஆன்மாக்களின் பரவசமும் பெருமகிழ்ச்சியுமான இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்எல்லா நம்பிக்கையிலும் ஊக்கமுள்ள நம்பிக்கையாகிய இறையிரக்கமே
நான் உம்மீது நம்பிக்கை வைக்கின்றேன்என்றும் வாழும் இறைவா! உமது இரக்கம் எல்லையற்றது. பரிவுக்கரூவூலம் குறைவு அடையாதது. எங்கள் துன்ப துயர நேரத்தில் நாங்கள் நம்பிக்கை இழக்காமலும் மனச்சோர்வு அடையாமலும் அன்பும் இரக்கமாய் உள்ள உமது திருசித்தத்திற்கு மிகுந்த தன் நம்பிக்கையுடன் கீழ்படிவதற்கு கனிவோடு எம்மை நோக்கி உமது இரக்கத்தை எம்மீது பெருகச் செய்தருளும். (கையேடு 950)
எல்லாம்வல்ல இறைவனின் அதியுயர் பண்பான அளவற்றதும் புரிந்துணர முடியாததும் ஆன இறை இரக்கமே! பாவிகளாகிய மனுக்குலத்துக்கு நீரே ஒரே இனிமைமிகு நம்பிக்கை. உம்மைப் புகழ்வதும் ஆராதிப்பதும் மகிமைப் படுத்துவதும் தகுதியாகும். ஆயினும் இது யாரால் கூடும். (கையேடு 951)
ஓ பேரிரக்கமுள்ள இறைவா, எண்ணிலடங்கா நன்மையே, இன்று முழுமனுக்குலமும் வேதனையின் ஆழியிலிருந்து உமதிரக்கத்தை உமது கருணையை வேண்டுகின்றது. ஓ இறைவனே! பலத்த குரலெழுப்பி துயரத்தால் கதறுகின்றது. தயைமிகு இறைவா! இவ்வுலக கண்ணீர் கணவாயிலிருந்து எழும் எம் வேண்டுதலைப் புறக்கணியாதேயும்.
ஓ ஆண்டவரே! எம்மால் புரிந்துணர முடியாத நன்மைத் தனமே, எமது அவல நிலையை முழுவதுமாக அனுபவித்தவரே. எமது பலத்தால் உம்மண்டை வர இயலாதவர்கள் நாம் என்பதை அறிந்தவரே. உமதருளைப் பொழிந்து, வாழ்வு முழுவதும், எம் மரண வேளையிலும் உமது சித்தத்தை நிறைவேற்றுமாறு உமது இரக்கத்தை எம்மீது பெருக விடுவீர் என்னும் எதிர்பார்ப்போடு உம்மை இறஞ்சுகின்றோம். நீர் மட்டுமே அறிந்த உமது இறுதி வருகையை உமது பிள்ளைகளாகிய நாங்கள் உறுதியுடன் எதிர்பார்த்திருப்பதற்கு எமது மீட்பின் எதிரியின் திடீர்கணைத் தாக்குதலில் இருந்து எம்மைப் பாதுகாத்தருளும். ஈனர்களாகிய நாங்கள் இயேசுவால் வாக்களிக்கப்பட்ட அனைத்தையும் பெறுவோம் என எதிர்பார்க்கிறோம். ஏனெனில், இயேசுவே எமது நம்பிக்கை. திறந்த கதவினூடாக செல்வதுபோல் அவருடைய இரக்கமுள்ள இதயத்தினூடாக நாம் விண்ணகம் செல்வோம். (கையேடு 1570)