இரக்கத்தின் மெய்யுரு (படம்)

1931ம் ஆண்டு மாசி மாதம் 22ந் திகதி அருட் சகோதரி பவுஸ்தீனா காட்சியில் கண்டதை எழுதும் போது விபரிப்பதாவது:

ஆண்டவர் தோன்றிய. வேளையில், இயேசு வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், வலது கையை உயர்த்தி ஆசீர்வதிப்பவர் போலவும், இடது கையால் வெண்ணிற ஆடையின் மார்பின் இதய பகுதியை தொட்டுக் கொண்டும், அந்த தொட்ட இடத்திலிருந்து ஒன்று சிவப்பும் மற்றென்று வெளிறிய மங்கலான நிறங் கொண்டதாக இரு ஒருங்கு கதிர்கள் வெளிவரக் கண்டேன். அமைதியாக நின்ற ஆண்டவரை அவள் கருத்தூண்றி ஊற்று நோக்கிய போது, அவளின் ஆன்மா மிகுந்த பயபக்தியால் நிறைந்ததோடு பெருமகிழ்சியால் நிறைந்தது.

அதன்போது இயேசு அவளிடம் கூறியதாவது:
"இப்போது நீ காணும் சாயலை ஒத்ததாக ஒரு சாயலை வரைந்து நிறந்தீட்டி அடியில் இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன் என ஒப்பமிடுவாயாக. இச்சாயலுக்கு பெருமதிப்புக் கொடுத்து திருநிலைப்படுத்தும் எவ்வான்மாவும் அழிந்து போகாது என நான் வாக்களிக்கிறேன். அத்தோடு அவ்வான்மாவின் இவ்வுலக எதிரியிடமிருந்தும், விசேடமாக மரணவேளையிலும் நான் மரணத்தின் மீது நான் கொண்ட எனது வெற்றிப் பெருமையையும் வாக்களிக்கின்றேன். மேலும் என் சொந்த மகிமையைப் போன்று அவ்வான்மாவை நானே பாதுகாப்பேன்."(கையேடு 47, 48)
"எனது பொங்கிப்பாயும் இரக்க அருளை நோக்கி மக்கள் வருவதற்கு நான் அவர்களுக்கு ஒரு கப்பலை கொடுக்கின்றேன். இயேசுவே நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன் என ஒப்பமிடப்பட்ட எனது சாயல் தான் அந்த கப்பல்." (கையேடு 327)
"இந்த சாயலை முதலில் உனது செபக்கூடத்திலும் (பின்பு) உலகின் எல்லப்பகுதிகளிலும் பெருமதிப்புக் கொடுத்து திருநிலைப்படுத்தவேண்டும் என்பதே எனது விருப்பம்." (கையேடு 47)
அவளுடைய ஆன்மீக வழிநடத்துனரின் வேண்டுகோளுக்கு இணங்க அருட்சகோதரி பவுஸ்தீனா இந்த சாயலில் தோன்றிய கதிர்களின் கருத்து என்ன? என்று ஆண்டவரிடம் கேட்டாள். அதன்போது இயேசு அவளிடம் கூறியது:
இரு கதிர்களும் இரத்தத்தையும் நீரையும் குறிக்கின்றது. மங்கலான வெளிறிய நிறங்கொண்ட கதிர்கள் ஆன்மாக்களை நேர்மையாளர்களாக உருவாக்கும் நீரை காட்டுகின்றது. சிவந்த கதிர்கள் ஆன்மாக்களை உயிரூட்டம் உள்ளதாக்கும் இரத்தத்தைக் வெளிப்படுத்துகின்றது. பெரும் வேதனை பட்ட எனது இதயம் சிலுவையிலே குத்தீட்டியால் திறக்கப்பட்ட வேளையில் கனிவிரக்கம் கொண்ட இதய ஆழத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்ட இரு கதிர்கள் இவைதான். இக்கதிர்களுள் அடைக்கலம் பெறுவோர் பேறு பெற்றோர் ஏனெனில் இறைவனின் நீதிக்கரத்தில் இவர்கள் அகப்படாமல் பாதுகாக்கப் படுவார்கள். (கையேடு 299)
இந்த சாயலினூடாக நான் ஆன்மாக்களுக்கு அதிகமான அருட்கொடைகளை வழங்குவேன். இது இரக்கத்தின் உரிமையுடன் நான் கேட்டுக் கொண்டதன் நினைவுறுத்தலாகும். ஏனெனில், எவ்வகை உறுதியான நம்பிக்கையாயினும் செயலற்றதாயின் அந்நம்பிக்கையால் ஒரு பிரயோசனமும் இல்லை.(கையேடு 742)
இவ்வார்த்தைகள் இந்த திரு உருவச் சாயல் இறைஇரக்கத்தின் அருள் அகில உலகிற்கும் விசேடமாக திருமுழுக்கு திவ்வியநற்கருணை வழியாகப் பொழியப்படுவதை குறித்துக் காட்டுகின்றது.
பல வித்தியாசமான பதிப்புரு கொண்ட விதத்தில் இப்படங்கள் வரையப்பட்டு உள்ளது. தன்னுடைய வழிகாட்டலுடன் வரையப்பட்ட மூலப்பிரதியை கண்டபோது புனித பவுஸ்தீனா நீர் இருக்கிற அழகுருவை போல் யாரால் உம்மை வரைய முடியும் என அழுது மிகுந்த ஏமாற்றத்தோடு இயேசுவிடம் முறையிடுகிறாள். அதற்கு மறுமொழியாக ஆண்டவர்:
"சாயலின் உருவமுறை முக்கியமானதல்ல, நிறங்களின் அழகினிலோ, துகில்களின் வரிகளிலோ இச்சாயலின் முக்கியத்துவம் இல்லை, ஆனால் இரக்கத்தோடு செயல்பட்டு இச்சாயலின்மேல் நம்பிக்கை வைக்கும் ஆன்மாவுக்கு நான் வழங்கும் எனதருளில்தான் தங்கியிருக்கின்றது"
என தெளிவு படுத்தும் வார்த்தைகளை அவள் கேட்டாள் (கையேடு 313)